பிரிட்டனில் பரவும் புதுவகை கிருமித்தொற்றின் முதல் சம்பவம் சிங்கப்பூரில் பதிவு

ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது - சிறை விதிப்பு
(PHOTO: Mothership)

சிங்கப்பூர், பிரிட்டனில் பரவும் புதுவகை COVID-19 கிருமித்தொற்றின் முதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது.

இதில் 17 வயது பெண் ஒருவருக்கு அந்த B-117 வகை கிருமி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவர் ஆகஸ்ட் முதல் பிரிட்டனில் படித்து வருகிறார்.

சிங்கப்பூரில் புத்தாண்டு கண்கவர் வாணவேடிக்கை நடைபெறும் 11 முக்கிய இடங்கள்!

அவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினார், இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகிறார்.

கடந்த டிசம்பர் 7ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது, பின்னர் அடுத்த நாள் COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று MOH தெரிவித்துள்ளது.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், B117 கிருமி தற்போது சமூகத்தில் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

அண்மையில் ஐரோப்பாவிலிருந்து சிங்கப்பூர் வந்த COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்கு, கிருமி மரபணு சோதனைகளை சிங்கப்பூரின் தேசிய பொது சுகாதார ஆய்வகம் மேற்கொண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட பரிசோதனை முடிவுகளில், B117 புதுவகை கிருமி மேலும் 11 பேருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற முடிவு நிலுவையில் உள்ளது என்று MOH கூறியுள்ளது.

Circular சாலையில் உள்ள உணவகத்தில் சண்டை…3 பேருக்கு காவல்துறை வலைவீச்சு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…