கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்த வட கொரியா – கடுமையாக எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர்

Korea's Ballistic Missile Test singapore-strongly-condemns
STR/AFP/KCNA VIA KNS

வட கொரியா (DPRK) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) சோதித்ததை சிங்கப்பூர் கடுமையாக கண்டித்துள்ளது.

இது ஆபத்தான ஆத்திரமூட்டும் செயல் என்று சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த செயல் கொரிய தீபகற்பத்தில் மேலும் பதட்டங்களை உயர்த்தியுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்… குழந்தைகள் இருக்கா?? – அப்போ உங்களுக்கு தான் இந்த ComLink ஆதரவு திட்டம்

“மேலும் இந்த செயல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்ததன்மையை பாதிக்கிறது.”

இது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாகவும் அது கூறியுள்ளது.

கோவத்தை ஏற்படுத்தும் இந்த செயல்களை உடனடியாக நிறுத்தவும், சர்வதேசக் கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளுக்குக் கட்டுப்படவும் சிங்கப்பூர் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“அம்மாவுக்கு உடம்பு முடியல, மகன் படிப்பு செலவு”… அலுவல வேலையை விட்டு, துப்புரவு வேலை பார்த்து இரு வீடுகள் வாங்கிய ஊழியர்!