லாலு பிரசாத் யாதவுக்காக சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வந்த மகள்!

Twitter Image

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் (வயது 74), கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மாட்டுத் தீவனம் ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறைக் கைதியான அவர், மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

மது அருந்திவிட்டு லாரியில் தூங்கியதற்கா சிறைத்தண்டனை! – சிங்கப்பூர் சிறையில் சின்னத்தம்பி!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாலு பிரசாத் யாதவ், அங்கு சில நாட்கள் தங்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.அவரை முழு மருத்துவ பரிசோதனை செய்த சிங்கப்பூர் மருத்துவர்கள், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய லாலு குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

பின்னர், லாலு பிரசாத் யாதவ், இந்தியா திரும்பியிருந்த நிலையில், டெல்லியில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், சிங்கப்பூரில் வசித்து வரும் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகள் ரோஹிணி ஆச்சார்யா, தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்திருக்கிறார்.

பறிபோன வேலை! – மெட்டாவில் நீக்கப்பட்ட பணியாளர்கள் LinkedIn-இல் குமுறல்! -பாதிக்கப்பட்ட 10 சிங்கப்பூரர்கள்!

இது குறித்து ரோஹிணி ஆச்சார்யா கூறுகையில், “அப்பாவுக்கு என்னுடைய சிறுநீரகத்தை அளிக்கப் போகிறேன். அதில் நான் பெருமைக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, லாலு பிரசாத் யாதவ் மீண்டும் நவம்பர் மாத இறுதியில் சிங்கப்பூருக்கு செல்லவுள்ளதாகவும், அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, லாலு குடும்பத்தினரும் சிங்கப்பூர் செல்கின்றனர்.

மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்! – பொதுவாக வயதான ஆண்கள் பணியில்;காவல்துறை ரெய்டில் சிக்கிய இரண்டு பெண்கள்!

லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், தற்போது பீகார் மாநில துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிறுநீரகத்தை தனது தந்தைக்கு தானம் செய்ய முன்வந்த ரோஹிணி ஆச்சார்யாவுக்கு, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.