சிங்கப்பூரில் 90,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்..!

lawrence wong says about foreign workers
PHOTO: MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION

வெளிநாட்டு ஊழியர்கள் தங்­கும் விடு­தி­களில் வசிக்கும் ஊழி­யர்­களில் குறைந்தது 90,000 பேர் தங்களுடைய வேலைக்­கு திரும்­பி­விட்­ட­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

நேற்றைய முன்தினம் நிலவரப்படி, சுமார் 180,000 ஊழியர்கள் குணமடைந்துள்ளனர் அல்லது கொரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக MOM செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்கு அதிகமானோர் வேலை இழக்க நேரிடலாம் – சான் சுன் சிங்..!

ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 87,000ஆக இருந்த அந்த எண்ணிக்கையானது, தற்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது.

அந்த ஊழி­யர்­களில் குறைந்­தது 90,000 பேர் தற்­போது வேலைக்­குத் திரும்­பி­யுள்­ள­னர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீதமுள்ளோரின் வேலை­யி­டங்­களில் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் இன்­னும் அமல்படுத்த வேண்­டி­யுள்­ள­தால் அவர்­கள் வேலைக்­குச் செல்­ல­வில்லை என்றும் வோங் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை முதல் சம்பவம் உறுதி செய்யப்பட்டபோதே மூடியிருக்க வேண்டும் – டான் செங் போக்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg