வேலையை இழந்த ஊழியர்கள் வேறு வேலை தேட உதவி – ஆட்குறைப்பு செய்யப்பட்டோருக்கு ஆதரவு

lazada-retrenchment-fdawu-ntuc
(Photo: Reuters)

லாசாடாவில் சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைத்துள்ளது.

அந்த நிறுவனத்திற்கும் ஊழியர் சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆதரவு வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்காக துணை நிற்கும் சிங்கப்பூர் அரசாங்கம்.. கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையாகும் விதிகள் – 2024 ஏப். 1 முதல் கட்டாயம்

“ஒரு இணக்கமான முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், தகுதியுள்ள பாதிக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உதவி வழங்கப்படும்.”

இதனை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப். 4) லாசாடா, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் உணவு, பானங்கள் ஊழியர் சங்கம் (FDAWU) ஆகியவை கூட்டு அறிக்கையில் வெளியிட்டன.

இதில் வேலையை இழந்த ஊழியர்களுக்கு வேறு வேலை தேட உதவி வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

மேலும், NTUC இன் e2i உடன் இணைந்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படும் என அது கூறியது.

சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்