சிங்கப்பூர் தந்தை திரு.லீ குவான் யூ கண்ணீர் விட்டு அழும் காட்சியை படம்பிடித்த ஒரே ஒருவர் காலமானார்

lee-kuan-yew-in-tears photographer-dies
Image source: ricemedia.co

சிங்கப்பூர் தந்தை திரு.லீ குவான் யூ கண்ணீர் விட்டு அழுத காட்சியை படம் பிடித்த புகைப்பட கலைஞர் காலமானார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

1965ஆம் ஆண்டு மலேசியாவை விட்டு சிங்கப்பூர் தனிநாடாக பிரிவது குறித்து அறிவித்தபோது அவர் கண்ணீர் விடும் காட்சியை திரு. அலி யூசோப் என்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் புகைப்பட கலைஞர் எடுத்தார்.

“பயிற்சி இல்லாத வேலையை பார்க்க சொன்னா என்ன பண்றது” – இரு ஊழியர்களின் மரணமும்.. நிறுவனத்தின் அஜாக்கிரதையும்..

இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அரிய காட்சியை வெளிக்காட்டும் புகைப்படம் ஒரு பிரதி மட்டுமே உள்ளது.

திரு. அலி, உடல்நல குறைபாடு காரணமாக கடந்த ஜன.6 ஆம் தேதி மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் இருந்தார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜன.7 ஆம் தேதி அன்று திரு. அலி யூசோப் தனது 84ஆம் வயதில் உயிரிழந்தார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் புகைப்பட கலைஞராக இருந்ததாக அவரின் மகன் கூறியுள்ளார்.

மேலும், திரு.லீ குவான் யூ கண்ணீர் விட்டு அழும் போது மற்ற புகைப்பட கலைஞர்கள் தயக்கத்துடன் படம் பிடிக்கவில்லை.

தாம் மட்டும் தைரியத்துடன் படம் எடுத்ததாக பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்து கொண்டார்.

அப்போது நெஞ்சம் படப்படத்ததாகவும், திரு. லீ திட்டுவார் என எதிர்பார்த்தாகவும் அவர் கூறினார்.

ஆனால், திரு லீ அவ்வாறு செய்யவில்லை என்றார்.

பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர் கவனத்திற்கு.. ஜூன் 1 முதல் இதை மட்டுமே பயன்படுத்த முடியும்