சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ-வின் 100- வது பிறந்தநாள்- சிறப்பு நாணயத்தை வெளியிட்டது சிங்கப்பூர் நாணய வாரியம்!

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ-வின் 100- வது பிறந்தநாள்- சிறப்பு நாணயத்தை வெளியிட்டது சிங்கப்பூர் நாணய வாரியம்!
Photo: Monetary Authority of Singapore Official website

 

 

சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான லீ குவான் இயூ-வின் 100- வது பிறந்தநாளையொட்டியும், அவரது பெருமையை நாட்டு மக்களுக்கு பறைச்சாற்றும் வகையில், 10 வெள்ளி மதிப்பிலான சிறப்பு நாணயத்தை சிங்கப்பூர் நாணய வாரியம் (Monetary Authority of Singapore- ‘MAS’) வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பிறந்து, இங்கேயே வளர்ந்த வெளிநாட்டு பெண் – இன்னமும் PR என்ற தகுதியை பெற முடியவில்லை

அலுமினியம் வெண்கலத்தில் அச்சிடப்பட்டுள்ள அந்த நாணயத்தின் விட்டம் 30 மிமீ ஆகும். நாணயம் தங்க நிறத்தில் இருக்கும். தற்போது புழக்கத்தில் உள்ள மூன்றாம் வரிசை நாணயங்களை விட, இந்த நாணயம் பெரியது.

‘LKY100 நாணயம்’ பெற விரும்புவோர் https://form.gov.sg/63bd27820542a60012aac0db என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று இன்று (மே 15) முதல் ஜூன் 9- ஆம் தேதி வரை சிங்கப்பூர்வாசிகள் மற்றும் நிரந்தரவாசிகள், நாணயங்களுக்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம். பின்னர், வரும் செப்டம்பர் மாதம் முதல் நாணயங்கள் விநியோகிக்கப்படும்.

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட மூன்று கிலோ தங்கம் பறிமுதல்!

ஒருநபர் அதிகபட்சம் ஐந்து நாணயங்களை பெற முடியும். பதிவு செய்தவர்கள் நாணயங்களை வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரை உலகளாவிய உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நிதி நடுவமாக மாற்றி அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வேலை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர் பிரதமர் லீ குவான் இயூ.