சிங்கப்பூரில் வெளியானது ‘லியோ’…. விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

சிங்கப்பூரில் வெளியானது 'லியோ'.... விஜய் ரசிகர்கள் உற்சாகம்!
File Photo

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று (அக்.19) வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, முன்னணி நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் மற்றும் முன்னணி திரைப்பட இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிக்ஷின் உள்ளிட்ட பிரபலங்களும், நடிகை த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

டிப்பர் லாரியுடன் விபத்து.. 38 வயதுடைய பெண் மரணம்

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள Golden Village, Cathay Cineplex, Carnival Cinemas உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட திரைகளில் லியோ திரைப்படம் வெளியானது. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், விஜய் திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்க ஆர்வம் காட்டினர். லியோ திரைப்படம் வெளியான நிலையில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் உற்சாகமுடன், கொண்டாடி வருகின்றனர்.

“அனைத்து விதமான பயணங்களையும் தவிர்க்க வேண்டும்” – சிங்கப்பூர் பயண ஆலோசனை

சிங்கப்பூரில் ‘லியோ’ திரைப்படத்திற்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது