“அனைத்து விதமான பயணங்களையும் தவிர்க்க வேண்டும்” – சிங்கப்பூர் பயண ஆலோசனை

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

லெபனானுக்கான அனைத்து விதமான பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் (MFA) ஆலோசனை வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் அந்நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்களையும் முடிந்த வரையில் விரைவில் வெளியேற வேண்டும் என்றும் MFA இன்று புதன்கிழமை (அக் 18) கேட்டுக்கொண்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி சிரமம் இருக்காது.. சட்டவிரோத லாரி சேவைக்கு குட்பை

மேலும், லெபனானில் இருக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

அங்கு இருப்போர், அந்நாட்டின் நடப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து, அரசாங்கத்தின் அறிவுரைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அமைச்சகம் ஆலோசனை கூறியது.

ஏனெனில், அங்கு நிலையற்ற ஒரு சூழ்நிலை நிலவி வருவதை அமைச்சு குறிப்பிட்டது.

“சிங்கப்பூரர்கள் லெபனான்-இஸ்ரேல் எல்லைப் பகுதிகளுக்கு பயணம் செய்வதையும், அதே போல் எதிர்ப்புகள் மற்றும் பெரிய கூட்டங்களில் கலந்துகொள்வதையும் தவிர்க்க வேண்டும்” என்று MFA மேலும் கூறியது.

லிட்டில் இந்தியாவிலுள்ள குடியிருப்பில் தீ.. 20 பேர் வெளியேற்றம் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி