சிங்கப்பூரில் குடும்பங்களை பிரிந்து வாடும் ஊழியர்களுக்கு ஆறுதல்

சிங்கப்பூரில் வங்கி கணக்கு
Photo: Getty

2020ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையே கலை மற்றும் கலாசாரத்தை பகிர்ந்துக்கொள்ளும் விதமாக ஆண்டுதோறும் “காஸ்வே எக்ஸ்சேஞ்ச்” கலைவிழா நடத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் மலேசியப் பாெறியாளரான பார்த்திபன் முனுசாமி (வயது 35) கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு வார கடைசியிலும் ஜோகூர் பாருவில் வசிக்கும் தனது பெற்றோரைச் சந்திக்க சென்றுவிடுவார்.

3 ஊழியர்களின் உயிரை பறித்த துவாஸ் வெடிப்பு – பொது விசாரணை…

கோவிட்-19 தாெற்றுப் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு சிங்கப்பூர் & மலேசியா நாடுகளின் எல்லைகள் அடைக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக தன் குடும்பத்தைப் பிரிந்திருப்பது மிகுந்த கவலையாக இருப்பதாக திரு. பார்த்திபன் கூறினார்.

தம் சகாேதரியின் மகளுடைய திருமணத்திற்கு செல்ல முடியாதது பெரிய ஏமாற்றம் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தன்னைப் போல் சிங்கப்பூரில் வசிக்கும் பல ஆயிரம் மலேசியர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் கவலையில் உள்ளனர் என திரு. பார்த்திபன் குறிப்பிட்டார்.

இதுபோன்று உள்ளவர்களின் கவலையைப் போக்கி, மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பிரபல நகைச்சுவை நடிகர்களைக் கொண்டு “காஸ்வே எக்ஸ்சேஞ்ச்” விழா, ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

இந்த மாதம் 18ஆம் தேதி இணையம் வழியாக நடக்கவிருக்கும் “லெட்ஸ் லாஃப் மலேசியா” என்ற இந்நிகழ்ச்சியில் பிரபல மலேசிய நகைச்சுவைக் கலைஞர்கள் கஜன், பிரகாஷ் டேனியல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

துயரங்களையும், துக்கங்களையும் மறக்க சிரிப்புதான் சிறந்த வழி

உறவுகளைவிட்டு சிங்கப்பூர் வந்து உழைக்கும் அனைத்து மலேசியர்களையும் இந்நிகழ்ச்சி ஒன்றிணைக்கும் என்று “லெட்ஸ் லாஃப் மலேசியா” நிகழ்ச்சியின் இயக்குநர் திரு. ஷான் லூர்துசாமி கூறினார்.

இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசம், எனவே கட்டணமின்றி அனைவரும் கண்டுகளிக்கலாம். இந்நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்ச்சியைக் காண இங்கு பதிவு செய்யலாம்: https://llm2021.peatix.com

கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் ஆட்கள் தேவை… வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு!