உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர், நியூயார்க் முதலிடம்!

Photo: Wikipedia

2022- ஆம் ஆண்டிற்கான உலகின் மிக விலையுயர்ந்த பெரும் நகரங்கள் (Most Expensive Cities) குறித்து எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit) ஆய்வு ஒன்றை நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஆய்வு முடிவுகளையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிடம் இருந்து இரண்டு தங்கக் கட்டிகள் பறிமுதல்!

உலகின் மிக விலையுயர்ந்த முதல் 10 நகரங்கள்:

1. சிங்கப்பூர், நியூயார்க் (அமெரிக்கா),
(இரண்டு நாடுகள் முதலிடத்தில் இருப்பதால், இரண்டாவது இடம் இல்லை)

3. டெல் அவிவ் (இஸ்ரேல்),

4. ஹாங்காங் (ஹாங்காங்), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா),

6. சூரிச் (சுவிட்சர்லாந்து),

7. ஜெனீவா (சுவிட்சர்லாந்து),

8. சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா),

9. பாரிஸ் (பிரான்ஸ்),

10, கோபன்ஹேகன் (டென்மார்க்).

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

இந்த பட்டியலில் உள்ள நாடுகளில் மனிதர்கள் வாழ்வதற்கான செலவினங்கள், பட்டியலில் இல்லாத மற்ற நாடுகளை விட அதிகமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகால ஆய்வில் சிங்கப்பூர் 8 முறை முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் சுமார் 170- க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டுள்ளது.