சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிடம் இருந்து இரண்டு தங்கக் கட்டிகள் பறிமுதல்!

Singapore passengers-trichy-airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் (Trichy International Airport) இருந்து துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, அபுதாபி, ஷார்ஜா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்கூட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வழித்தடங்களுக்கு அதிகளவில் விமானங்களை இயக்கி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட குவாண்டஸ் விமானம் அஸர்பைஜானில் அவசர அவசரமாகத் தரையிறக்கம்!

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகவே உள்ளது. இதனால் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தீவிர சோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில், டிசம்பர் 24- ஆம் தேதி அன்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒரு பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து அவர் கொண்டு வந்த உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பால் பவுடர் டப்பாவில் பிஸ்கட் வடிவிலான இரண்டு தங்கக் கட்டிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஜன.21- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் தை அமாவாசை வழிபாடு!

அந்த கடத்தல் தங்கக் கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கத்தின் எடை 147 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் ரூபாய் 8 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தைக் கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.