லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: சிக்கிய மதுபான கடைகளும், ஊழியர்களும்..

liquor-shops-under-investigation-police-singapore-little-india
SPF

லிட்டில் இந்தியாவில் உள்ள மதுபானக் கட்டுப்பாட்டு இடங்களில் மறைவிடம் அமைத்து மது அருந்த ஏற்பாடு செய்த 4 கடைகள் சிக்கின.

அதோடு சேர்த்து 14 மதுபான கடைகளும், மது நுகர்வு மற்றும் விற்பனை தொடர்பான விதிகளை மீறியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்

கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 12 க்கு இடையில் நடத்தப்பட்ட அமலாக்க சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து அந்த கடைகள் பிடிபட்டன.

கிளைவ் ஸ்ட்ரீட் மற்றும் டன்லப் ஸ்ட்ரீட் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளும் இதில் அடங்கும்.

இந்த கடைகள் தங்கள் வளாகத்தில் மது அருந்துவதற்கு தேவையான உரிமம் வாங்காமல் செயல்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மதுபானக் கட்டுப்பாட்டு இடத்திற்குள் பரிந்துரைக்கப்பட்ட நேரங்களை மீறினால் $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

முறையான உரிமம் இல்லாமல் மதுபானம் விநியோகம் செய்தால் $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் $20,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இது போன்ற விதிமுறை மீறலுக்கு எதிராக தொடர்ந்து அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மது அருந்துவோருக்கு வந்தது புதிய திருத்த சட்டம்: 2024 ஜனவரி 2 முதல்… மீறினால் நடவடிக்கை

35 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரம்.. அப்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஆடவர்.. சிங்கப்பூர் வந்தபோது கைது