லிட்டில் இந்தியாவில் S$300,000 கொள்ளை: வெளிநாட்டவர் உட்பட கடைசி இருவர் குற்றாவளி என அதிரடி தீர்ப்பு

ittle India shop fined
Photo: Getty

குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் போல தன்னை காட்டிக் கொண்டு, லிட்டில் இந்தியாவில் சட்டவிரோதமாக பணம் அனுப்பும் தொழிலை இரண்டு வங்காளதேசியர்கள் நடத்தி வந்துள்ளனர்.

அவர்களை குறிவைத்து, மொத்தமாக S$300,000 ரொக்க பணத்தை திருட்டு கும்பல் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

தெம்பனீஸ் சந்திப்பில் 6 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம், 4 பேர் காயம் – (பதைபதைக்கும் விபத்து வீடியோ)

விசாரணைக்குப் பிறகு, ஐந்து கொள்ளையர்களில் கடைசி இருவர் இதில் குற்றவாளிகள் என்று நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 24) முதன்மை மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்தார்.

முஹம்மது ரிட்சுவான் முகமது யூசோப் (32) மற்றும் தவ குமரன் ராமமுட்டி (37) ஆகிய இருவரும் கும்பல் கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருட்டு ஆகிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டனர்.

கொள்ளையில் ஈடுபட்ட மற்ற மூன்று பேர், நோர் முகமட் அஸ்ரில் சஜாலி (29), ஷங்கர் மகாலிங்கம் (32), மற்றும் ஜுரைமி ஜூப்ரி (43) ஆகியோர் முன்னர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.

46 வயதான சிக்தர் சுஜான் மற்றும் 49 வயதான ஆலம்கிர் எம்டி ஆகிய இரு வங்காளதேசியர்கள் மீது உரிமம் இல்லாமல் பணம் அனுப்பும் தொழிலை நடத்தியதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களில் S$140,000 இழப்பு – பொதுமக்களுக்கு OCBC வங்கி எச்சரிக்கை