சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள் நினைவு நாணயம்: வெளிநாட்டு ஊழியர்களும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின்
Singapore & Nathan/Xiaohongshu

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் (LKY100) 100வது பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக S$10 நாணயம் வெளியானது.

இந்நிலையில், சுமார் 142 வங்கிக் கிளைகளில் வரும் டிசம்பர் 4 முதல் 31 வரை பொதுமக்கள் LKY100 நாணயத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இயந்திரத்தில் தலை சிக்கி மரணித்த வெளிநாட்டு ஊழியர் – இயந்திரத்தை பராமரிக்கவில்லை என்பதே உண்மை…

இந்த தகவலை சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இன்றைய (நவ.22) ஊடக வெளியீட்டில் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இணையத்தில் விண்ணப்பித்து பெற முடியாதவர்களும், கூடுதலாக LKY100 நாணயங்களை பெற விரும்புபவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதாவது சுமார் 700,000 க்கும் மேற்பட்ட LKY100 நாணயங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று MAS தெரிவித்துள்ளது.

LKY100 நாணயங்களை பெறவிரும்புவோர் NRIC-யை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

வெளிநாட்டவர்கள், பாஸ்போர்ட் அல்லது வேலை அனுமதிகளை கொண்டு செல்ல வேண்டும் என MAS நினைவூட்டியது.

ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் கையிருப்பு இருக்கும் வரை, எவ்வளவு நாணயங்கள் வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது.

முழு விவரம் அறிய: https://go.gov.sg/lky100coin

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள்: 4 மில்லியன் S$10 நினைவு நாணயங்கள்

100 இளைஞர்கள் ஒன்றாக கூடியிருந்த இடத்தில் சண்டை.. ஆண், பெண்ணுக்கு தலா S$25, S$10 கட்டணம் – மடக்கிய போலீஸ்