“உலகிலேயே நீண்ட தூரம் செல்லும் ‘Non-Stop’ விமானம் எது தெரியுமா?”- விரிவான தகவல்!

Photo: Singapore Airlines Official Facebook Page

 

உலகளவில் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines). இந்த நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் இடையே இடைநில்லா என்றழைக்கப்படும் ‘Non Stop’ விமான சேவைகளை வழங்கி வருகிறது. இதுதான் உலகிலேயே நீண்ட தூரம் செல்லும் ‘Non-Stop’ விமானம் ஆகும்.

வேலைக்கு வந்த இடத்தில் இது தேவையா.. சமூக வலைத்தளத்தில் “வட்டிக்கு கடன்” என விளம்பரம் செய்த வெளிநாட்டவர்

சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகரத்தை சுமார் 18 மணி நேரம் 7 நிமிடங்களில் கடக்கிறது. சுமார் 15 நாடுகளைக் கடந்துச் செல்கிறது. அதாவது, 15,345 கிலோ மீட்டர் தூரத்தை மற்ற விமான நிறுவனங்களை காட்டிலும், விரைவான விமான சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் பயணிக்க, அதிக பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தைத் தேர்வு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியர்களின் கவனத்திற்கு….சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

அதேபோல், நீண்ட பயண தூரம் கொண்ட உலகின் 2- வது விமானமும் சிங்கப்பூருக்கு தான் வருகிறது. அமெரிக்காவின் நேவார்க்- சிங்கப்பூர் இடையே 15,345 கிலோ மீட்டர் தூரத்தை 18 மணி நேரம் 25 நிமிடங்களில் அந்த விமானம் கடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.