வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு இவ்வளவு தான் வேகம்.. வந்தது புதிய கட்டுப்பாடு

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் அதிக லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 3,501கி முதல் 12,000கி வரை எடை கொண்ட லாரிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் சம்பளத்தை உயர்த்த 72 சதவீத முதலாளிகள் திட்டம் – ஆய்வு

அதாவது, அவ்வகையான லாரிகளுக்கும் இனி வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை நிறுவ வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை (TP) கூறியுள்ளது.

இதன் மூலமாக லாரிகள் 60கிமீ வேக வரம்புக்குள் செல்லும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த கட்டாய நடைமுறை படிப்படியாக செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவது தொடங்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

லாரிகளில் பயணம் செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

ஏற்கனவே, 12,000 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் – சென்னை இடையே தினசரி விமான சேவை – நவ.5 முதல் தொடக்கம்