சிங்கப்பூரில் லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் வெளிநாட்டவர்.. கடும் விபத்தில் சிக்கி தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் வெளிநாட்டவர்.. கடும் விபத்தில் சிக்கி தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி
Shin Min Daily News and Wikipedia

பான் தீவு விரைவுசாலையில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 21 ஆம் தேதி காலை 7:30 மணியளவில், மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற அவர் பேருந்தில் மோதி விபத்தில் சிக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்திய பணிப்பெண்ணுக்கு சொந்த ஊரில் வீடு கட்டிக்கொடுத்த சிங்கப்பூர் முதலாளி – “பணிப்பெண் கிடைத்தது எங்கள் பாக்கியம்” என புகழாரம்

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் முகமது ஜாஃப்ரி (27) என்ற அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பணி முடிந்து வீடு திரும்பும் போது டவர் டிரான்சிட் பேருந்தின் பின்புறத்தில் அவர் மோதியதாக கூறப்பட்டுள்ளது.

விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரின் மண்டை ஓடு மற்றும் விலா எலும்புகள் உடைந்ததாகவும், மேலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும் ஷின் மின் டெய்லி நியூஸ் சொன்னது.

தன்னுடைய பெற்றோரின் மூன்று குழந்தைகளில் மூத்தவரான ஜாஃப்ரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, ஒரு வருடத்திற்கு முன்பு தான் சிங்கப்பூருக்கு லாரி ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்தார்.

இவரின் வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்ததாக அவரின் தந்தை கூறியுள்ளார்.

அவர் மலேசியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

“மோதல் எச்சரிக்கை, ஓட்டுநர் சோர்வை கண்காணிக்கும் அமைப்பு” ஆகிய சிறப்புகளுடன் கூடிய மின்சார பேருந்துகள் அறிமுகம்