தலைகுப்புற கவிழ்ந்து கடும் விபத்துக்குள்ளான லாரி – இருவர் மருத்துவமனையில் அனுமதி

Lorry overturns outside Suntec City
TikTok

Esplanade MRT நிலையத்துக்கு வெளியே ComfortDelGro டாக்சி மற்றும் லாரி சம்பந்தப்பட்ட விபத்து நேற்று முன்தினம் மே 2 அன்று ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Work permit அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 6 பெண்கள் கைது – விசாரணையில் 48 பெண்கள்

Raffles Boulevard மற்றும் Nicoll Highway சந்திப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

இதில் கவிழ்ந்து கிடைக்கும் லாரியின் காட்சிகள் அடங்கிய வீடியோ டிக்டாக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

மயக்கமடைந்த 56 வயது ஆடவரும் மற்றும் சுயநினைவுடன் இருந்த 47 வயது ஆடவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் மிகவும் அரிதான நிகழ்வு… கட்டுமான தளத்தை சிதறடித்த “landspout” என்னும் சூறாவளி – Viral Video