Work permit அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 6 பெண்கள் கைது – விசாரணையில் 48 பெண்கள்

without work-permit arrest massage-establishment-raid
SPF

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 48 பெண்கள் சிக்கினர்.

அதாவது தோ பாயோ, புக்கிட் திமா, ரிவர் வேலி & சின் மிங் ஆகிய இடங்களில் உள்ள மசாஜ் செய்யும் இடங்களில் இந்த சோதனை நடந்தது.

இந்த கூட்டு அமலாக்க சோதனை நடவடிக்கை கடந்த மாதம் ஏப்ரல் 26 முதல் 28 வரை நடத்தப்பட்டது.

சிங்கப்பூரின் மிகவும் அரிதான நிகழ்வு… கட்டுமான தளத்தை சிதறடித்த “landspout” என்னும் சூறாவளி – Viral Video

அதில் சிக்கிய 20 முதல் 70 வயதுக்குட்பட்ட மொத்தம் 110 பேர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அதில் பிடிபட்ட 48 பெண்கள், 20-47 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் Women’s Charter 1961 சட்டத்தின்கீழ் விசாரணையில் உள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதில் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் 1990 இன் கீழ் work permit அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்டவர்களிடன் இருந்து ரொக்க பணம், செல்போன்கள் மற்றும் சூதாட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடனை வாங்கிக்கொண்டு சொந்த நாட்டுக்கு ஓட்டம்… Work Permit, புகைப்படத்தை அனுப்பி மிரட்டும் கடனாளிகள் – உயிரிழந்த முதலாளி.. தொடரும் சோகம்