லாரி மோதியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி!

லாரி மோதியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி!
Photo : SG Road Vigilante

 

லாரி மோதியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 30 பேர் வெளியேற்றம்

கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி மாலை 05.15 PM மணியளவில் சிங்கப்பூரின் அங் மோ கியோ இண்டஸ்ட்ரியல் பார்க் 2 (Ang Mo Kio Industrial Park 2) மற்றும் அங் மோ கியோ அவென்யூ 2 (Ang Mo Kio Avenue 3) சந்திப்பில் ஆண் நபர் ஒருவர் தலைக்கவசம், பாதுகாப்பு கவசத்தை அணிந்தவாறு சாலையோரத்தில் உள்ள நடைப்பாதையில் நடந்துக் கொண்டிருந்தார். அப்போது வலதுபுறமாகத் திரும்பிய லாரி அவர் மீது மோதியது.

சிறிது தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட நபர் காயங்களுடன் செங்காங் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (Singapore Civil Defence Force- ‘SCDF’) உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து சிசிடிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர்ந்த போது, அவர் நடந்துச் சென்றதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

லண்டனில் உணவகத்தைத் திறந்துள்ள ‘Singapulah’!

சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காயமடைந்த நபர், தொழிலாளியாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.