லண்டனில் உணவகத்தைத் திறந்துள்ள ‘Singapulah’!

லண்டனில் உணவகத்தைத் திறந்துள்ள 'Singapulah'!
Photo: singapulah_restaurant/Instagram

 

சிங்கப்பூரில் உள்ள பிரபல உணவகங்களில் ஒன்று ‘Singapulah’. இந்த உணவு நிறுவனம், கடந்த பிப்ரவரி 16- ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டனில் தனது உணவகத்தின் கிளையைத் திறந்துள்ளது. திறப்பு விழாவில், இங்கிலாந்து நாட்டிற்கான சிங்கப்பூர் தூதர் இங் டெக் ஹீயன் (Ng Teck Hean, Singapore’s High Commissioner to the United Kingdom) கலந்து கொண்டு உணவகத்தை முறைப்படி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் விழாவில், சிங்க நடனம் இடம் பெற்றிருந்தது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அந்த மாறி சேவை.. “S$50 முதல் S$150 கட்டணம்”.. கடைக்கு வெளியே நின்று கொண்டு ஆண்களை வற்புறுத்தி அழைக்கும் பெண்கள்

லண்டனில் உணவகத்தைத் திறந்துள்ள 'Singapulah'!
Photo: singapulah_restaurant/Instagram

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு உணவுகள் தயாரித்து விற்பனை செய்வதாக ‘Singapulah’ உணவகம் தெரிவித்துள்ளது. உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள மெனுவில் சிங்கப்பூர் உணவு வகைகளின் பெயரும், அதனுடன் லண்டன் விலைகளுடனும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 30 பேர் வெளியேற்றம்

தொடக்க விழா சலுகையாக 28.86 வெள்ளிக்கு Singapulah Bak Chor Mee வகை உணவும், Singapore Laksa வகை உணவும் வழங்கப்படும்; Blk 53 Wonton Mee வகை உணவு 14.95 வெள்ளிக்கும், Nasi Lemak Ayam Goreng வகை உணவு 25.46 வெள்ளிக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.