கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய குழாயில் சிக்கிக்கொண்ட ஊழியர் உயிரிழப்பு – தொடரும் சோகம்

SCDF/Facebook

சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 27) லாரியில் இருந்து கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய உலோக குழாயின் அடியில் சிக்கிக்கொண்ட 49 வயதான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

அன்றைய தினமே பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக முன்னர் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

“சிங்கப்பூரில் வரும் வாரங்களில் குரங்கு அம்மை கண்டறியப்படலாம்”

தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், மே 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 1.05 மணியளவில் 18 டெஃபு அவென்யூ 2 நடந்தது என்று SCDF கூறியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து, மதியம் 1.55 மணியளவில் தகவல் கிடைத்ததாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.

“புரொப்பல்லர் ஷாஃப்ட்ஸ் எனப்படும் பெரிய உலோக உருளைக் குழாய்களைத் தூக்கி இறக்கும் பணி நடந்து கொண்டிருந்தது, அப்போது லாரியில் இருந்து கிரேன் அதன் பக்கத்தில் கவிழ்ந்தது.”

“இதனால் கிரேனில் இருந்த குழாய் ஒன்று உருண்டு ஊழியர் மீது விழுந்தது, இதனால் அவரின் கால் பகுதி அந்த குழாயின் அடியில் சிக்கிக்கொண்டது.”

அதனை அடுத்து, டான் டொக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று MOM கூறியது.

இந்த ஆண்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த வேலையிட இறப்புகளின் எண்ணிக்கை 25ஆக உள்ளது.

சிங்கப்பூரில் சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

உலகின் மிகப்பெரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: ஏற்றுமதி கட்டுப்படுத்துவதால் சிங்கப்பூருக்கு பாதிப்பா?