“அனைத்து ஊழியர்களையும் மதிக்க வேண்டும்.. குறைந்த ஊதியம் ஈட்டும் ஊழியர்களுக்கு சம்பளம் உயரும்” – அதிபர் தர்மன்

New calls early screening cancers Singapore

சிங்கப்பூரில் குறைந்த ஊதியம் பெறும் 400 ஊழியர்கள் NTUC நடத்திய ஆய்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

அவர்களில் பாதி ஊழியர்கள் மட்டுமே தாங்கள் செய்யும் வேலையை குறித்து பெருமை கொள்வதாக குறிப்பிட்டனர்.

உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர்.. விடுதிக்கு திரும்ப பேருந்துக்காக 3 மணிநேரம் காத்திருந்த சோகம்

மேலும், அதில் நான்கில் ஒரு பகுதியினர் தங்கள் வேலையில் அவமரியாதை செய்யப்படுவதாக கூறினர்.

“இந்த ஆய்வு முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. நாம் அனைவரும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.”

“மேலும் ஊழியர்கள் யார் என்றாலும், அவர்கள் என்ன வேலை செய்தாலும் அனைவரையும் மதிக்கும் இடமாக சிங்கப்பூரை மாற்ற விரும்புகிறோம்” என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் Facebook பக்கத்தில் கூறியுள்ளார்.

“குறைந்த ஊதியத்தில் உள்ள பல ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது.”

“அதே போல, படிப்படியாக உயரும் ஊதிய முறையின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் அதிகமான ஊழியர்களுக்கு ஊதியம் உயரும்” என்றும் அவர் கூறினார்.

குறைந்த ஊதியம் வாங்கும் பெரும்பாலான ஊழியர்களை இது உள்ளடக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. $2 கொடுத்து சட்டவிரோத லாரி சேவையில் பயணிக்கும் நிலை