சிங்கப்பூரில் மாதத்திற்கு S$2,200 வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பரிந்துரை

migrantworker
Getty Images

சிங்கப்பூரில் மாதத்திற்கு S$2,200 வரை சம்பாதிக்கும் குறைந்த-ஊதியம் பெறும் ஊழியர்கள் 5.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை சம்பள உயர்வுகளைப் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (நவம்பர் 14) வெளியிடப்பட்ட தேசிய ஊதியக் குழுவின் (NWC) புதிய வழிகாட்டுதல்களின்படி அது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சலீம் என்ற போலியான பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்த வீரமுத்து: சிங்கப்பூரில் இருந்து திருச்சி… சிறையில் அடைத்த போலீஸ்

மொத்த ஊதியத்தில் 5.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை அல்லது குறைந்தபட்சம் S$80 முதல் S$100 வரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மொத்த மாத ஊதியம் S$2,200 பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வை முதலாளிகள் வழங்க வேண்டும் என NWC பரிந்துரைக்கிறது.

சிங்கப்பூர் குடியிருப்பாளர்களில் முழுநேர வேலையில் உள்ள சுமார் 20 சதவீத ஊழியர்களுக்கு அந்த பரிந்துரை பயன் தரும் என சொல்லப்பட்டுள்ளது.

“என்ன பெத்த அம்மாவையே தப்பா பேசுவியா..” – கடை உரிமையாளரை பொளந்த மகன் (வீடியோ)