சிங்கப்பூர் லாட்டரியில் இலகுவாக வெல்ல… ஜோசியம் பார்த்து “4D அதிஷ்ட எண்கள்” கொடுக்கும் ஆடவர்

Lucky 4D numbers selling
Lucky 4D numbers selling

Lucky 4D numbers selling: சிங்கப்பூர் லாட்டரியில் இலகுவாக வெல்ல என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.

அதற்கு பெரும்பாலானோர் நம்புவது அதிர்ஷ்டத்தை மட்டும் தான், அவ்வாறான அதிஷ்ட எண்களில் டிக்கெட் வாங்கினால் ஜாக்பாட் தொகையை வெற்றிபெறும் வாய்ப்பை அதிகரிக்குமா? என்பது தான் கேள்வியே.

“பிளாஸ்டிக் பையில் கடல் உயிரினம்” – இரவு நேரத்தில் கடலில் எடுக்கப்பட்ட புகைப்படம் – விருதை தட்டி தூக்கிய சிங்கப்பூரர்

சிலர் இதுபோன்ற அதிஷ்டங்களின் அடிப்படையில் வெற்றிபெற்றுதும் உண்டு, பலர் இதுவரை வெற்றி பெறாமல் இருப்பதும் உண்டு.

அதன் அடிப்படையில், புகிஸில் உள்ள ஃபு லு ஷோ வளாகத்திற்கு வெளியே முதியவர் ஒருவர் அதிஷ்ட 4D லாட்டரி எண்களை விற்கும் தற்காலிக கடையை அமைத்துள்ளதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், அந்த முதியவரிடமிருந்து சில 4D வாடிக்கையாளர்கள் ‘அதிர்ஷ்ட’ லாட்டரி எண்களை வாங்குவதைக் கண்டதாக ஷின் மின் குறிப்பிட்டுள்ளது.

அந்த முதியவரின் தற்காலிகக் கடையைச் சுற்றி 20க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததை ஷின் மின்க்கு வந்த காணொளியில் காண முடிந்ததாக அது கூறியது.

காணொளியில், “முதியவர் ஒரு பெண்மணிக்கு $2 வெள்ளி வாங்கிக்கொண்டு 4D அதிஷ்ட எண்ணை கொடுக்கிறார். பின்னர் பெண் சென்றவுடன், மற்றொரு பெண் அங்கு வந்து அமர்ந்து அவரிடம் அதிர்ஷ்ட எண்ணைக் கேட்கிறார்.”

பெயர் சொல்ல விரும்பாத நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறியதாவது: “இங்கு ஒருவர் கடை அமைந்துள்ளதை முதல்முறையாக நான் பார்க்கிறேன். அவர்கள் அதிஷ்ட ஜோசியம் சொல்வது போலவும், லாட்டரிக்கு அதிர்ஷ்ட எண்களை கொடுப்பது போலவும் தெரிகிறது, ஆனால் இது சட்டப்பூர்வமானதா எனத் தெரியவில்லை.”

அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் தனது கடையை போடுவதாகவும், ஆனால் தொடர்ந்து இல்லாமல் எப்போதாவது மட்டுமே கடை போடுவதாகவும் அந்த முதியவர் சொன்னார்.

அவர் கொடுக்கும் 4D எண்கள், தனது வாடிக்கையாளர்களின் பிறந்தநாளின் அடிப்படையில் கணித சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகின்றன என்பதையும் அவர் தெளிப்படுத்தினார்.

அவர் தனது சேவைகளுக்கு கட்டணம் கேட்பதில்லை என்றும், வாடிக்கையாளர்கள் எவ்வளவு செலுத்த விரும்புகிறார்களோ அவர்களே முடிவு செய்து கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்திய ஊழியரை கீழே தள்ளிவிட்டு, மோசமாக நடந்துகொண்ட விலையுயர்ந்த காரின் உரிமையாளர் – கொதித்தெழுந்த நிறுவனம்