‘மஹா சிவராத்திரி 2024’- ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு!

சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் பூஜை!
Google Image

 

மஹா சிவராத்திரி 2024-யை (Maha Sivarathiri 2024) முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் (Sri Siva Krishna Temple) சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலைக்கு வந்த இடத்தில் இது தேவையா.. சமூக வலைத்தளத்தில் “வட்டிக்கு கடன்” என விளம்பரம் செய்த வெளிநாட்டவர்

சிங்கப்பூரில் உள்ள மார்சிலிங் ரிஷ் (Marsiling Rise) பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயம் (Sri Siva Krishna Temple). இந்த ஆலயத்தில் வரும் மார்ச் 08- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் மார்ச் 08- ஆம் தேதி வெள்ளிக்கிழமை மஹா சிவராத்திரி அன்று மாலை 06.00 மணிக்கு சிவனுக்கு சங்கல்பமும், கலச பூஜையும், ஸ்ரீ ருத்ர ஹோமமும், இரவு 07.00 மணிக்கு முதல் கால சிறப்பு அபிஷேகமும், இரவு 08.00 மணிக்கு பூர்ணாஹூதியும், தீபாராதனையும், கலசாபிஷேகமும், இரவு 09.00 மணிக்கு மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வுடன் முதல் கால பூஜை நிறைவுப் பெறுகிறது.

அன்றைய தினம் இரவு 09.00 மணிக்கு சங்கல்பமும், கலசபூஜையும், ஸ்ரீ சிவ மூலமந்திரஹோமமும், இரவு 10.00 மணிக்கு இரண்டாம் கால சிறப்பு அபிஷேகமும், பக்தர்கள் கலந்து கொள்ளும் 108 பால்குட அபிஷேகமும், இரவு 11.00 மணிக்கு பூர்ணாஹூதியும், தீபாராதனையும் கலசாபிஷேகமும், நள்ளிரவு 12.00 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலுடன் இரண்டாம் கால பூஜை நிறைவுப் பெறுகிறது.

மார்ச் 09- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நள்ளிரவு 01.00 மணிக்கு சங்கல்பமும், கலசபூஜையும், ஸ்ரீ ருத்ர த்ருசதி ஹோமமும், நள்ளிரவு 02.00 மணிக்கு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகமும், நள்ளிரவு 02.30 மணிக்கு பூர்ணாஹூதியும், தீபாராதனையும், கலசாபிஷேகமும், நள்ளிரவு 03.30 மணிக்கு மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் மூன்றாம் கால பூஜை நிறைவடையும்.

மலேசியர்களின் கவனத்திற்கு….சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

அன்றைய தினம் அதிகாலை 04.00 மணிக்கு சங்கல்பமும், கலச பூஜையும், ஸ்ரீ பஞ்ச அஸ்திர ஹோமமும், அதிகாலை 05.00 மணிக்கு நான்காம் கால சிறப்பு அபிஷேகமும், அதிகாலை 05.30 மணிக்கு பூர்ணாஹூதியும், தீபாராதனையும், கலசாபிஷேகமும், காலை 06.00 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலுடன் நான்காம் கால பூஜை நிறைவடையும். மஹா சிவராத்திரி பூஜைகளில் கலந்து கொள்ளுமாறு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.