மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது!

மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது!
Photo: Sri sivan Temple

 

சிங்கப்பூரில் உள்ள கேலாங் ஈஸ்ட் அவென்யூவில் (Geylang East Ave) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயில் நேற்று (மார்ச் 08) மஹா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது. இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிவலிங்கத்திற்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனைகள் காட்டப்பட்டது.

விமான நிலையத்தின் கழிவறையில் கிடந்த தங்க பேஸ்ட்…..சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நேற்று (மார்ச் 08) இரவு 07.00 மணிக்கு தொடங்கிய பூஜைகள், இன்று காலை 06.00 மணிக்கு நிறைவடைந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபட்டு சென்றனர்.

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், இந்து அறக்கட்டளை வாரியமும் செய்திருந்தனர். அதேபோல், பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வயலின் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் விடிய விடிய நடைபெற்றன. பக்தர்களை சமாளிக்க சுமார் 300- க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் கோயில் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஏர்டெல் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் 0.8%-ஐ விற்றது சிங்டெல்!

சிங்கப்பூரில் உள்ள மற்ற கோயில்களிலும் மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.