முதலாளியின் உறவினரை கொடூரமாக கொலை செய்ததற்காக வெளிநாட்டு பணிப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்

Supreme Court of Singapore

தனது முதலாளியின் 70 வயது மாமியாரைக் கொலை செய்ததற்காக பணிப்பெண் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 9) ஆஜர் ஆகியுள்ளார்.

அவர் மியான்மரைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் என்றும், மேலும் அவர் சிங்கப்பூரில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு இது நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய அப்டேட்

வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை, Zin Mar Nwe என்ற அந்த பணிப்பெண் சுமார் 26 முறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

ஏஜெண்டிடம் பணிப்பெண் திருப்பி அனுப்பப்படுவார் என்று அந்த மூதாட்டி கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு ஜனவரி 5, அன்று அவர் சிங்கப்பூருக்கு வந்ததாகவும், மேலும் அவரது பாஸ்போர்ட் அடிப்படையில் அப்போது அவரது வயது 23ஆக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்-மலேசியா இடையே தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான தனிமை இல்லா சிறப்பு பயணம்