வெளிநாட்டு பணிப்பெண்ணை தன் சொந்த செலவில் சுற்றுலா அனுப்பிய சிங்கப்பூர் முதலாளி – “நான் அதிஷ்டசாலி” என மகிழ்ச்சி

maid goes tour employer sponsors
Screengrab/TikTok/Rosisam

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் 17 நாட்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா பயணம் சென்றதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

TikTok பயனரான Rosisam என்ற பணிப்பெண், வியட்நாமிற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுற்றுலா சென்றுள்ளதாகவும், அதற்கு இருவழி விமான டிக்கெட்டுகள் முதல்கொண்டு தனது முதலாளி உதவி செய்ததாகவும் கூறினார்.

தீபாவளி இரவில் ஏற்பட்ட சண்டை.. ஆடவர் ஒருவர் மருத்துவனையில் அனுமதி – ஒருவர் கைது

அதோடு சேர்த்து தன்னுடைய 65-லி பயண பையையும் முதலாளி கொடுத்து உதவியதாக இந்தோனேசிய பணிப்பெண் கூறினார்.

ஹனோயில் தொடங்கி ஹோ சி மின் நகரில் முடிவடைந்த தனது தனி சுற்றுலா பயணம் பற்றி TikTok புகைப்பட ஸ்லைடுஷோவில் பணிப்பெண் பகிர்ந்துள்ளார்.

முதலாளி குறித்து கூறிய பணிப்பெண்; “அவர்கள் மென்மையான குணம் கொண்ட அன்பானவர்கள் என்றார்.”

மேலும், அவர்கள் எனக்கு முதலாளியாக கிடைத்ததால், தாம் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக பணிப்பெண் கூறினார்.

வெளிநாட்டு ஊழியருக்கு சட்டவிரோத முறையில் உதவி செய்த ஆடவருக்கு S$5,000 அபாரதம்