சிங்கப்பூரில் 22 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய பணிப்பெண்… சிறை தண்டனை விதிப்பு

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் - கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்
(Photo: TODAY)

சிங்கப்பூரில் 22 மாத குழந்தையை பல வாரங்கள் துன்புறுத்திய குற்றத்திற்காக வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு நேற்று (ஆகஸ்ட் 25) 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் 29 வயதான ஸ்ரீ இஹா சாந்திகா சாரி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த ஐந்து சம்பவங்களில் தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

தென்னிந்திய மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உடும்பு கறி – மண்பானையில் “உடும்பு கறி சோறு” வைரல்

குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மோசமான செயலுக்காக மற்றொரு குற்றச்சாட்டும் தண்டனைக்காக கருத்தில் கொள்ளப்பட்டது.

2020 ஆம் ஆண்டு டிசம்பரில் பணிப்பெண் அந்த குடும்பத்தில் வேலை செய்யத் தொடங்கினார். அதனை அடுத்து 2021 ஜூன் முதல் குழந்தையை கடினமான முறையில் நடத்தியதை ஒப்புக்கொண்டார்.

அதாவது குழந்தையை அடிப்பது, காதுகளை திருகுவது, தலைமுடியை பிடித்து இழுப்பது, தலையில் தட்டுவது மற்றும் கால்களில் அடிப்பது ஆகிய கொடுமைகளும் அதில் அடங்கும்.

ஒருநாள் வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராவை குழந்தையின் தந்தை சோதனை செய்தபோது இந்த உண்மைகள் வெட்டவெளிச்சம் ஆனது.

சிங்கப்பூரில் லாரி மோதி ஊழியர் மரணம் – தொடரும் உயிரிழப்புகள்