முதியவர் ATM கார்டை பயன்படுத்தி S$162,000 பணத்தை திருடிய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

முதியவர் ஒருவரை கவனித்து வந்த பணிப்பெண், அவரின் தனிப்பட்ட அடையாள எண்ணை (PIN) மனனம் செய்து அவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் S$162,000 பணத்தை திருட்டு தனமாக எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

S$48,400 திருடிய குற்றத்திற்காக 41 வயதான இந்தோனேசிய நாட்டை சேர்ந்த சித்தி நூர்யாந்திக்கு 28 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாலத்தின் கீழ் தவறான செயலை செய்த வெளிநாட்டவர்.. S$2,500 அபாரதம் விதிப்பு

எஞ்சிய பணத்தை திருடியதற்காக இதேபோன்ற மற்றொரு இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டன.

இந்தோனேசியாவில் உரிமம் பெறாத சட்டவிரோதமாகப் பணம் கொடுக்கும் நபர்களிடம் கடனை அடைப்பதற்காகவும், கடனாளிகளுக்கு பணம் செலுத்துவதற்காகவும் நூர்யாந்தி பணத்தை திருடியதாக கூறப்பட்டுள்ளது.

ATM கார்டை முதியவர் தனது அறையில் வைத்திருப்பதை அறிந்த நூர்யாந்தி, அதனை எடுத்து சிங்கப்பூரில் உள்ள பல்வேறு ATM களில் பலமுறை பயன்படுத்தி பணம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுமார் 50 முறை ATM கார்டை பயன்படுத்தி S$48,400 பணத்தை எடுத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அவரின் மகன் கண்டுபிடித்ததை அடுத்து அவர் போலீசில் புகார் செய்தார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சண்டையில் ஈடுபட்ட நான்கு ஆடவர்கள் கைது – காணொளி