முதலாளியின் நடத்தையால் அதிருப்தி.. எறும்பு மருந்தை தண்ணீரில் கலந்த வெளிநாட்டு பணிப்பெண் – கடைசியில் நடந்த ட்விஸ்ட்

(Photo: Tan Tock Seng Hospital/ Facebook)

முதலாளியின் நடத்தையால் அதிருப்தி அடைந்த பணிப்பெண் ஒருவர், எறும்பு மருந்தை தண்ணீரில் கலந்து குடித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பின்னர் 35 வயதான மியான்மர் நாட்டைச் சேர்ந்த திடர் வின் என்ற அந்த பணிப்பெண், வாந்தியெடுக்கத் தொடங்கினார்.

இராமநாதபுரத்தில் ஊழியர் வீட்டு திருமணம்.. சிங்கப்பூர் முதலாளிகள் “மாஸ் என்ட்ரி” – பள்ளிக்கு நிதி வழங்கி கௌரவம்

மேலும் அதனால் அசௌகரியத்தை உணர்ந்த அந்த பணிப்பெண் வலியை குறைக்க நிவாரணியை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே தண்ணீரை அவரது 57 வயதான முதலாளியும் குடித்ததாகவும், பின்னர் அதில் விசித்திரமான சுவையை உணர்ந்ததாகவும் கூறினார்.

பின்னர் முதலாளிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு (TTSH) கொண்டு செல்லப்பட்டார். சோதனையில் எறும்பு மருந்து உட்கொண்டது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தீங்கு விளைவிக்கும் பொருளைக் கொண்டு முதலாளிக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்தை பணிப்பெண் ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து, மார்ச் 1 அன்று அவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”