இராமநாதபுரத்தில் ஊழியர் வீட்டு திருமணம்.. சிங்கப்பூர் முதலாளிகள் “மாஸ் என்ட்ரி” – பள்ளிக்கு நிதி வழங்கி கௌரவம்

singapore employers came workers daughters wedding at tamilnadu
Tamil Media

சிங்கப்பூர் முதலாளிகள் தங்கள் ஊழியரின் அன்பான அழைப்பை ஏற்று முதுகுளத்தூர் வந்து திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாட்டு ஊழியர்களின் வீட்டு நிகழ்வுகளில் சிங்கப்பூர் முதலாளிகள் பங்குபெறுவது என்பது சமீபத்திய காலத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களின் திருமணம், பிள்ளைகளின் காது குத்து போன்ற நிகழ்வுகளில் சிங்கப்பூர் முதலாளிகள் அதிகம் கலந்துகொள்வதை சமீப நாட்களாக நாம் பார்த்து வருகிறோம்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த செந்தூர் பாண்டியன் சிங்கப்பூரில் கடந்த 10 வருடங்களாக EI corporation Ltd என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஊழியரின் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் முதலாளிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.

ஊழியரின் அன்பான அழைப்பை ஏற்ற கூலின், கான்மிங்க், டிம் என்ற 3 சிங்கப்பூர் முதலாளிகளும் செந்தூர் பாண்டியன் மகள் முகாவிஜி திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tamil media

வழக்கம்போல, தமிழ் பாரம்பரிய வேஷ்டிகள் அணியவைத்து, குதிரை சாரட்டில் ஏற்றி கொண்டு, ஜெண்டை மேளம் முழங்க அவர்களுக்கு வேற லெவல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலாளிகள் ஆசியுடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில், முகாவிஜி பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற முதலாளிகளுக்கு அங்கும் வேற லெவல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், பள்ளி வளர்ச்சிக்காக வேண்டி ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாக அவர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை வாழ்த்தி பாராட்டினர்.

பெண்களிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்டு பிடிபட்ட இரு இந்திய நாட்டவர்கள்

குடும்ப விழாவுக்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகளை நெகிழ வைத்த தொழிலாளி!