வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை – சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

சிங்கப்பூரில்
PHOTO: Today

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனது முதலாளியின் 70 வயது மாமியாரைக் கொலை செய்ததற்காக பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துவாஸ் தொழிற்பேட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து

அவர் மியான்மரைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் என்றும், மேலும் அவர் சிங்கப்பூரில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த 70 வயதான அந்த மூதாட்டியை, Zin Mar Nwe என்ற அந்த பணிப்பெண் சுமார் 26 முறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

“ஏஜெண்டிடம் உன்னை திருப்பி அனுப்பி விடுவேன்” என்று கூறி பணிப்பெண்ணை மூதாட்டி மிரட்டியுள்ளார். இதனால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி 5, அன்று அவர் சிங்கப்பூருக்கு வந்ததாகவும், மேலும் அவரது பாஸ்போர்ட் அடிப்படையில் அப்போது அவரது வயது 23ஆக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சம்பவத்திற்குப் பிறகு நடந்த வயது பரிசோதனையில் குற்றத்தைச் செய்தபோது பணிப்பெண்ணுக்கு 17 வயது தான் என்பதும் நிரூபணமானது.

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடமில்லை என்பதால், அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.

மேலும் சட்டப்படி பெண்களுக்கு பிரம்படி தண்டனை விதிக்க முடியாது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இடம் மாறிய முகவரியை தெரிவிக்காத நபருக்கு S$3,700 அபராதம் – செலுத்தத் தவறினால் சிறை