இந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கு நுழைவை எளிதாக்கும் மனிதவள அமைச்சகம்..!

நுழைவு அனுமதிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட, சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களின் நுழைவை மனிதவள அமைச்சகம் (MOM) எளிதாக்கும் என்று தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு பணிபுரியும் வீட்டுப் பணிப்பெண்களுக்கு அனுமதியில் முன்னுரிமை அளிப்பதை MOM பரிசீலிக்குமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிசால் கேள்வி (நவம்பர் 2) கேட்டிருந்தார்.

தங்கும் விடுதியில் வன்முறை ஏற்பட்டுவிடுமோ என்பதால் கூடுதல் பிரிவுகள் தயார் நிலையில் இருந்தன – அமைச்சர்

அதற்கு மனிதவளத் இணை அமைச்சர் கன் சியோவ் ஹுவாங், நாடாளுமன்றத்தில் இந்த தகவலை கூறினார்.

COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களின் மாதாந்திர வருகை இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு குறைந்துள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாத சராசரி 3,400 உடன் ஒப்பிடும்போது, ​​கடந்த மே முதல் அக்டோபர் வரை, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 900 பணிப்பெண்கள் சிங்கப்பூர் வந்துள்ளனர் என்று திருமதி கன் கூறினார்.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் (MDWs) சிங்கப்பூருக்குள் வருவதற்கான அனுமதிக்காக இன்னும் பல குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பதை மனிதவள அமைச்சகம் (MOM) ஒப்புக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

மேலும், பிராந்திய COVID-19 நிலைமை மேம்படும்போது, அதிக நுழைவு அனுமதிகளை MOM வழங்கும் என்று அவர் கூறினார்.

ஜனவரி-செப்டம்பர் இடையில் Work permit பெற்ற 98 வெளிநாட்டு ஊழியர்கள் மனநல மருத்துவமனையில் அனுமதி