முதலாளி வீட்டில் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பணிப்பெண்… S$50000 ரொக்கம் நகைகள் திருட்டு

Maid stole over S$50000 and jewellery from employer's mother-in-law
Shin Min Daily News

முதலாளி வீட்டில் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு புதன்கிழமை (ஜூலை 26) ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முதலாளி வீட்டில் அலமாரி பெட்டியிலிருந்து நகைகளையும், S$50,000 ரொக்கத்தையும் அவர் திருடியதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்ய “பெஸ்ட் நிறுவனம்” எது ? – நல்ல சம்பளம், சமமாக நடத்துதல், முன்னேற்றம்

திருடியது கண்டுபிடிக்கப்பட்டதும், அடகுக் கடைகளில் தான் அடகு வைத்த நகைகளை விற்கும்படி மற்றொரு பணிப்பெண்ணைத் தொடர்பு கொண்டு அவர் கூறியுள்ளார்.

பணிப்பெண் முதலில் தாம் செய்த குற்றங்களை மறுத்துள்ளார், ஆனால் போலீஸ் அதிகாரி அவரை அழைத்துச் செல்லும் போது சலசலக்கும் காகித சத்தம் வந்ததை கவனித்தார்.

அதன் பின்னர் சோதித்ததில் பணிப்பெண் அடகு சீட்டுகளை மறைத்து வைத்திருந்ததையும், மதிய உணவுப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையும் அதிகாரி கண்டுபிடித்தார்.

39 வயதான எர்னா சுசிலாவதி என்ற அவர், இரண்டு திருட்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

மேக்பெர்சன் பகுதியில் உள்ள தரைவீட்டில் சுசீலாவதி வேலை பார்த்து வந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

அவருக்கு மாதச் சம்பளமாக S$900 கொடுக்கப்பட்டதாகவும், மேலும் விடுமுறை நாட்களுடன் சேர்த்து சீனப் புத்தாண்டின் போது 10 நாட்கள் வருடாந்திர விடுமுறையும் அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள்.. “ஊழியர்களை லாரியில் ஏற்றக்கூடாது” – பிரதமருக்கு மனு