“இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பணிபெண்களுக்கு கட்டுப்பிடியாகும் கட்டணம்” – ஏஜென்சிகளின் விளம்பரம்

maid indian spore saree festival
Photo: P.Karthikeyan

சிங்கப்பூரில் பொருட்களை விளம்பரப்படுத்துவது போல வெளிநாட்டு பணிப்பெண்கள் விளம்பரப்படுத்தப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஏஜென்சிகள் தங்கள் கடை அறிவிப்பு பலகைகளில் “பணத்திற்கு ஏற்ற மதிப்பு” என்றும், “கட்டுப்பிடியாகும் கட்டணம்” என்ற வாக்குறுதிகளுடனும் விளம்பரம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

63 வயதான ஊழியர்.. “மேம்பாலத்தில் ஏறி போக 20 நிமிஷம் ஆகுது” இயலாத நிலையிலும் அயராது உழைக்கும் உழைப்பாளி!

புக்கிட் திமா ஷாப்பிங் சென்டரில் உள்ள 30க்கும் மேற்பட்ட பணிப்பெண் ஏஜென்சிகள், அவர்களிடம் வெளிநாட்டு ஊழியர்கள் வாடகைக்கு கிடைக்கும் என விளம்பரப்படுத்துகின்றன.

மேலும் அதன் அருகிலுள்ள பியூட்டி வேர்ல்ட் பிளாசாவில் செயல்படும் Hope Recruitment ஏஜென்சி நிறுவனம் மியான்மர் வீட்டுப் பணிப்பெண்களுக்கு கட்டுப்பிடியாகும் கட்டணம் என்றும் மற்றும் அவர்கள் எளிமைக்கு பெயர் பெற்றவர்கள் என்றும் விளம்பரப்படுத்துகின்றது.

அதே போல, வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு “மலிவு கட்டணம்” எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்பு கொண்டபோது, திரு டான் கூறியதாவது; அதுபோன்ற விளம்பரங்கள் அவமரியாதை செய்வதை ஒப்புக்கொண்டார்.

“சமீபத்தில் ஜனவரி மாதம் தான் Hope Recruitment நிறுவனத்தின் உரிமையை நாங்கள் எடுத்துக்கொண்டோம், முந்தைய உரிமையாளரால் வெளியிடப்பட்ட விளம்பரம் பற்றி எங்களுக்குத் தெரியாது. அது போன்ற விளம்பரங்கள் பின்னர் நீக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

ஏஜென்சிகள், பணிப்பெண்களை பொருட்களை விற்பது போல விளம்பரம் செய்வது குறித்து 2014 ஆம் ஆண்டில் மனிதவள அமைச்சகம் (MOM) ஆலோசனையை வெளியிட்டது.

தற்போதைய MOM வழிகாட்டுதல்களின்படி, விளம்பரங்களில் பணிப்பெண்களின் கட்டணங்களைக் குறிப்பிட கூடாது அல்லது பணிப்பெண்களை வணிகப் பொருட்கள் போல நடத்த கூடாது என்று கூறியது.

பணிப்பெண்களின் தன்மை மற்றும் புத்திசாலித்தனம் போன்ற அகநிலை பண்புகளை ஏஜென்சிகள் விளம்பரப்படுத்தக்கூடாது என்றும் MOM கூறியது.

தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்.. மாதம் 5.6 லட்சம் என 25 ஆண்டுக்கு ஜாக்பாட் பரிசு