63 வயதான ஊழியர்.. “மேம்பாலத்தில் ஏறி போக 20 நிமிஷம் ஆகுது” இயலாத நிலையிலும் அயராது உழைக்கும் உழைப்பாளி!

cleaner-climb-132-steps-overhead-bridge-bedok
Google Maps & Shin Min Daily News

சிங்கப்பூரில் 63 வயதான துப்புரவு ஊழியர் ஒருவர் இந்த வயதான காலத்தில் தினமும் மேம்பாலத்தில் ஏறி வேலைக்குச் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது வாரத்தில் ஆறு நாட்கள் வேலைக்கு செல்வதாகவும், ஒவ்வொரு முறையும் பாலத்தில் ஏறிச்செல்ல 20 நிமிடங்கள் செலவிடுவதாகவும் ஷின் மின் டெய்லி நியூஸிடம் அவர் கூறினார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்.. மாதம் 5.6 லட்சம் என 25 ஆண்டுக்கு ஜாக்பாட் பரிசு

Bedok Reservoir சாலையில் உள்ள மேம்பாலத்தில் அவர் ஏறிச்செல்வதாக கூறியுள்ளார். பாலத்தின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குச் செல்ல மொத்தம் 132 படிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது, மொத்த உயரத்தை கணக்கிட்டால் HDB பிளாட்டின் ஆறு மாடிகள் ஏறுவதற்கு அது ஒப்பானதாக ஷின் மின் டெய்லி மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அவரைப் போன்று பாலத்தின் படிகளில் ஏற முடியாத முதியோர்களுக்காக அதிகாரிகள் லிஃப்ட் கட்டுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே பாலத்தில் ஏறி வருவதாகவும், தற்போது வயதாகி விட்டது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஷின் மினின் கேள்விகளுக்குப் பதிலளித்த நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) செய்தித் தொடர்பாளர்; அந்த பாலத்தில் லிப்ட் அமைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.

அவர்கள் பாதசாரி பயன்படுத்தும் 83 மேம்பாலங்களில் லிஃப்ட்களை நிறுவியுள்ளதாகவும், மேலும் 24 மேம்பாலங்களில் லிஃப்ட் அமைக்கும் பணிகள் 2025க்குள் முடிக்கப்படும் என்றும் அது சுட்டிக்காட்டியது.

செந்தோசா தீவில் ஆடவரை காணவில்லை – தேடும் பணி தீவிரம்