ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர் – MOM..!

Majority of workers laid off by Resorts World Sentosa were foreigners: MOM
Majority of workers laid off by Resorts World Sentosa were foreigners: MOM (Photo: Resorts World Sentosa)

சிங்கப்பூரில் கடந்த மாதம் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் (RWS) ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர் என்று மனிதவள அமைச்சு (MOM) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா ஆட்குறைப்பில், உள்நாட்டு ஊழியர்கள் பங்கு 66 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரிக்க வழிவகுத்ததாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இந்த மாத இறுதிக்குள் வேலைக்குத் திரும்ப முடியும் – அமைச்சர் லாரன்ஸ் வோங்..!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊழியர்களின் பணித்திறனில், உள்நாட்டு ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முன்னுரிமை அளிக்கப்படுவதாக MOM குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர், உள்நாட்டு ஊழியருடன் ஒப்பிடும்போது அதிக பணித்திறன் மதிப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்று பரவலை தொடர்ந்து, ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மாதம் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டின் இறுதி நிலவரப்படி, இது 7,000க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு நியாயமற்ற ஆட்குறைப்பு நடைமுறைகளுக்கும், ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஊழியர்களையும், கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துமாறு முதலாளிகளுக்கு நாங்கள் நினைவூட்டுகிறோம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியருக்கான சில உதவி எண்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg