சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியருக்கான சில உதவி எண்கள்

some helplines for migrant worker who that needs assistance
(Photo: Dailytimes)

சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், சில உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றை தொடர்பு கொண்டு அவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.

சிங்கப்பூரில் கடந்த ஜூலை 31 அன்று நள்ளிரவு காக்கி புக்கிட் வீட்டு வசதியில், தி லியோ (The Leo) வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதியில் ஜன்னல் கீழ் பகுதியில் உள்ள விளிம்பில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் நின்று கொண்டு உள்ளே செல்ல மறுத்த காணொளியை நாம் பார்த்திருப்போம்.

இதையும் படிங்க : COVID-19 தடுப்பு மருந்து உலகளவில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வது முக்கியம் – சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா இணக்கம்..!

அதில் அவரை மற்ற ஊழியர்கள் வெற்றிகரமாக சமாதானப்படுத்தி, ஜன்னல் வழியாக பிளாட்டுக்குள் அழைத்துச் செல்வதையம் பார்த்திருப்போம்.

அதனை தொடர்ந்து அவர் மனநலச் சட்டத்தின் கீழ் சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இது போன்று உதவி தேவைப்படுவோர் குறித்த தகவலை பற்றி முன்னரே நீங்கள் உதவி எண்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவி எண்கள்:
  • வெளிநாட்டு ஊழியர்களுக்கான 24 மணி நேர உதவி எண்: 6536 2692
  • மனிதவள அமைச்சகத்தின் (MOM) கருத்து படிவம்: www.mom.gov.sg/efeedback
  • வெளிநாட்டு ஊழியர்களுக்கான HOME உதவி எண்: 6341 5535
  • வெளிநாட்டு ஊழியர்களுக்கான TWC2 உதவி எண்: 6297 7564

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 127 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg