‘மகரவிளக்கு’: ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Sri Vairavimada Kaliamman Temple

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) கீழ்வரும் மாற்றங்கள் மகரவிளக்கு நாளன்று, (வரும் ஜனவரி 12- ஆம் தேதி புதன்கிழமை முதல் ஜனவரி 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை) பொருந்தும்.

காலை 06.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

‘பார்சிலோனா, மிலன் இடையே விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

பின்வரும் நிகழ்வுகளில் நேரலையை https://bit.ly/makaravilakku2022 or https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்.

அபிஷேகம், வேதபாராயணம் & ஸ்ரீ ஐயப்பன் அஷ்டோத்திரம் பாராயணம் மாலை 06.30 மணிக்கு நடைபெறும். தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேதம், லோகவீரம், பஞ்சரத்தினம் மற்றும் படிப்பாட்டு இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி- ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.