அழிந்து வரும் அரியவகை “மலாயன் தபீர்” – சிங்கப்பூர் வரலாற்றில் 2வது முறையாக காட்சி

Malayan tapir spore
MC Wai's video and via Mandai Wildlife Reserve

அழிந்து வரும் அரியவகை விலங்கான “மலாயன் தபீர்” சிங்கப்பூரின் பொங்கோல் பகுதியில் காணப்பட்டது.

கடைசியாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் அது காணப்பட்டதாகவும், அதற்கு பிறகு தற்போது பார்க்க முடிந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஊழியர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கும் முதலாளிகள்… ஊழியர்களுக்கு பக்கபலமாக நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் பல்லுயிர்ப் பதிவேட்டின்படி, 1986 ஆம் ஆண்டில் புலாவ் உபினில் உள்ள குவாரியில் அந்த விலங்கு இறந்து கிடந்த நிலையில் காணப்பட்டது.

அதையும் சேர்த்து, மலாயன் தபீர் மூன்றாவது முறையாக சிங்கப்பூரில் காணப்பட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நேற்று முன்தினம் ஜூலை 22 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பொங்கோலில் உள்ள பூங்கா இணைப்பில் அதை கண்டதாக அதிர்ஷ்டசாலி சைக்கிள் ஓட்டி ஒருவர் கூறினார்.

அதனை வீடியோவாக எடுத்து அவர் வெளியிட்டார், அது சிங்கப்பூர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு, தெற்கு தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் மலாயன் தபீர் இருந்தாலும், மலேசியாவில் இது ஒரு சின்னமாக விளங்குகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

விசா இல்லாமல் இலவசமாக பயணிக்க வாய்ப்பு: பட்டியலில் சிங்கப்பூர் உள்ளிட்ட இரு நாடுகள்