100 ஆண்டுகளில் இல்லாத அளவு “கடும் வெள்ளம்” – மலேசியாவில் 5 பேர் பலி, 41,000 பேர் வெளியேற்றம்

malaysia_flood
(AP Photo/Vincent Thian)

மலேசியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளம் காரணமாக சிலாங்கூர் மற்றும் பகாங்கில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷா ஆலம் (Shah Alam), தாமன் ஸ்ரீ மூடாவில் (Taman Sri Muda) இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 20) மூன்று பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக ஷா ஆலம் காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் பகுருதின் மத் தாயிப் தெரிவித்தார்.

சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 183 பேர் – தீவிர கண்காணிப்பு

கண்டுபிடிக்கப்பட்ட அவர்களில் இருவர் உள்ளூர்வாசிகள் என்று நம்பப்படுகிறது, அதே நேரத்தில் இறந்த மூன்றாவது நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று Sinar Harian தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7.50 மணியளவில் வெள்ள நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

அதன் பின்னர், சிலாங்கூரில் உள்ள ஷா ஆலமில் உள்ள ஆலம் இடமான் குடியிருப்புக்கு அருகில் சடலம் ஒன்று பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக பகுருதின் கூறினார்.

30 வயதுடைய அந்த ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இறந்தவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது என்று போலீஸ் கூறியதாக மலாய் மெயில் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 7.15 மணியளவில் கம்பங் செம்பக்காவில் 34 வயதுடைய மற்றொரு ஆடவரின் சடலம் பகாங்கின் குவாந்தனில் கண்டுபிடிக்கப்பட்டது.

மலேசியாவில் கடும் வெள்ளம்: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்