அதிவேக ரயில் திட்ட செலவு $102.8 மில்லியனை சிங்கப்பூருக்கு திருப்பி கொடுத்த மலேசியா..!

(Photo: Focus Malaysia)

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை பேணும் வகையில் அதிவேக ரயில் திட்டம் தொடர்பில் இரு நாடுகளும் உறுதி செய்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதிவேக ரயில் திட்டமானது ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இதில் ஏற்பட்ட $102.8 மில்லியன் செலவை சிங்கப்பூருக்கு மலேசியா திருப்பி கொடுத்ததாக சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சரும், மலேசியா பிரதமரின் பொருளியல் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட முதல் பொது பேருந்துகள் – சோதனை தொடக்கம்!

இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும், நல்ல உறவுகளை தொடர்ந்து வைத்துக்கொள்ளவும் நாங்கள் கடமைப்பட்டிருப்பதாக இரு நாடுகளும் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

விமானப் பயணம் மற்றும் ஜோகூர் கடற்பலம் உபயோகிப்பது போன்ற விவகாரங்கள் ஆகிய பல அம்சங்களில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூர் இந்த ரயில் திட்டத்திற்க்காக இதுவரை சுமார் $270 மில்லியன் செலவு செய்துள்ளதாக அமைச்சர் ஓங் கூறியுள்ளார்.

இந்த அதிவேக ரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்தை மலேசியா ரத்து செய்ய கோரி கேட்டபோது, அதற்க்கு அங்கீகாரம் அளித்து அதன் ஒப்பந்த நிபந்தனைகளை வரையறுத்து தரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

முகக்கவசத்தை அகற்றி காவல்துறை அதிகாரி மீது வேண்டுமென்றே இருமிய ஆடவருக்கு 14 வார சிறை!