முகக்கவசத்தை அகற்றி காவல்துறை அதிகாரி மீது வேண்டுமென்றே இருமிய ஆடவருக்கு 14 வார சிறை!

Photo: Getty

கடந்த ஆண்டு கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் தனது முகக்கவசத்தை அகற்றி, காவல்துறை அதிகாரி ஒருவரை நோக்கி வேண்டுமென்றே இருமிய ஆடவருக்கு 14 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

29 வயதான தேவராஜ் தமிழ் செல்வன் என்ற அவர், காவல்துறை அதிகாரியிடம் முரட்டுத்தமனாக நடந்துகொண்டது மற்றும் தவறான நடத்தை ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட முதல் பொது பேருந்துகள் – சோதனை தொடக்கம்!

அதே போல் இரண்டு அதிகாரிகளிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகவும் அவர் ஒப்புக் கொண்டார். இதற்காக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மூன்று ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அவருக்கான தண்டனை விதிப்பு காலத்தில் மேலும் பத்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

அவற்றில் தவறான வார்த்தைகளை அரசு அதிகாரிக்கு எதிரான பயன்படுத்தியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கும்.

இந்த நாட்டுடன் எல்லைகளை மீண்டும் திறக்க சிங்கப்பூர் பரிசீலனை