சிங்கப்பூரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட முதல் பொது பேருந்துகள் – சோதனை தொடக்கம்!

(Photo: TODAY)

சிங்கப்பூரில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட முதல் பொது பேருந்துகள் இன்று (மார்ச் 30) ​​முதல் ஆறு மாதம் சோதனையாக இயக்கப்பட உள்ளது.

கோ-அஹெட் (Go-Ahead) நிறுவனம் ஆறு மாத சோதனை அடிப்படையில் பேருந்தை சாலைகளில் இயக்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டுடன் எல்லைகளை மீண்டும் திறக்க சிங்கப்பூர் பரிசீலனை

1.6 மிமீ தடிமன், நெகிழ்வு தன்மை மற்றும் உடையாத வண்ணம் உருவாக்கப்பட்ட சோலார் பேனல்கள் பேருந்துகளின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த இரண்டு பேருந்துகளும் சேவை எண் 15இல் இயங்கும், இது பாசிர் ரிஸ் பஸ் இன்டர்சேஞ்சில் தொடங்கி முடிவடையும்.

இந்த சோதனை வரும் செப்டம்பர் மாதம் வரை இயங்கும்.

பேருந்துகளில் பேட்டரி சார்ஜ் செய்ய சோலார் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் வரை பறக்க…!