இந்த நாட்டுடன் எல்லைகளை மீண்டும் திறக்க சிங்கப்பூர் பரிசீலனை

(PHOTO: JP/Jessicha Valentina)

ஹாங்காங் உடனான எல்லைகளை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்கான திட்டத்தை சிங்கப்பூர் ஆய்வு செய்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருடனான பயண குமிழி (travel bubble) குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஹாங்காங் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து இந்த பரிசீலனை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் வரை பறக்க…!

சமீப வாரங்களில் ஹாங்காங் நாட்டில் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த திரு ஓங், இது மிகவும் சாதகமான முன்னேற்றம் என்றும் அறிக்கையில் தெரிவித்தார்.

இருநாட்டு எல்லைகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்க பரிசீலித்து வருவதாகவும், விரைவில் ஹாங்காங்கிற்கு பதிலளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூருடனான பயணக் குமிழி முறையை மீண்டும் தொடங்க இரண்டு நிபந்தனைகள் உள்ளன என்று ஹாங்காங்கின் வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டு செயலாளர் எட்வர்ட் யவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதில் புறப்படுவதற்கு முன்பும், வந்த பின்னரும் COVID-19 பரிசோதனை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் நடந்துமுடிந்த பங்குனி உத்திரத் திருவிழா – 7000 பக்தர்கள் கலந்து கொண்டனர்!