அமைதியான முறையில் நடந்துமுடிந்த பங்குனி உத்திரத் திருவிழா – 7000 பக்தர்கள் கலந்து கொண்டனர்!

(Photo: Holy Tree Sri Balasubramaniar Temple / FB)

பங்குனி உத்திரத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் காவடி ஆட்டம், மேள தாள முழக்கத்தோடு ஆரவாரமாக நடைபெறும்.

இந்த முறை கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

காபி கடையில் மயங்கி விழுந்த முதியவருக்கு உதவிய புக்கிட் படோக் MP முரளி பிள்ளை!

கடந்த ஆண்டில் கிருமித்தொற்று அதிகமாக இருந்ததால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை, கிருமித்தொற்று படி படியா சரியாகிவருவதால் கோவிலுக்குள் சென்று வழிபடுவது, பால் அபிஷேகம் செய்வது போன்றவைகள் அனுமதிக்க படுவதாக கூறப்பட்டுள்ளது.

சட்ட, உள்த்துறை அமைச்சர் கா.சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளதாவும் கூறப்பட்டது.

மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட பிறகு இந்த திருவிழாவை கடந்த ஆண்டுகளை போல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரான திரு விக்ரம் நாயர் தெரிவித்துள்ளார்.

இதில் சுமார் 7000 பக்தர்கள் கலந்து கொண்டதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகளை மீறாமல் சிறப்பாக திருவிழாவை நடத்தியதாகவும், முகக்கவசம் கை சுத்தகரிப்பான் போன்ற பாதுகாப்பு உபகரண பொருட்களையும் கொண்டு தயார் செய்ததாகவும் கூறப்பட்டது.

பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை புரிந்து கொண்டு கவனமாகவும் பொறுமைகாயாவும் வழிபட்டு சென்றுள்ளதாக நிர்வாக தொண்டூழியர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு..!