அனைத்து பயணிகளுக்கும் இன்பச் செய்தி சொன்ன மலேசியா… மாஸ்க் இனி தேவை இல்லை – அதிரடி அறிவிப்புகள்

Photo: Business Insider

மலேசியாவுக்குச் செல்லத் திட்டமிடும் பயணிகளுக்கு இன்பச் செய்தி, ஆம் அந்நாடு தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் பலவற்றை நீக்கியுள்ளது.

மலேசியாவில் இனி வெளி இடங்களில் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டியதில்லை என்று மலாய் மெயில் தெரிவித்துள்ளது.

தான் ஓட்டிய கனரக வாகனம் தனக்கே எமனாய் வந்த சோகம் – தமிழக ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

இருப்பினும், வீட்டிற்குள்ளும் பொது போக்குவரத்திலும் இருக்கும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆயினும்கூட, வெளி இடங்களில் முகக்கவசங்கள் அணிவதை மலேசிய சுகாதார அமைச்சகம் ஊக்குவிக்கிறது, ஏனெனில் இது கோவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும் என கூறியுள்ளது.

மேலும், உடல்நிலை சரியில்லாதவர்கள் உள் புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ இருந்தாலும் சரி, அவர்கள் முகக்கவசம் அணியுமாறு மலேசியாவின் சுகாதார அமைச்சர் கைரி ஜலாமுதீன் அறிவுறுத்தினார்.

கூடுதலாக, வரும் மே 1 முதல் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாய கோவிட் சோதனைகள் இனி இல்லை என கைரி கூறினார். முன்னர் சிங்கப்பூர் பயணிகளுக்கு மட்டும் இது நீக்கப்பட்டது.

மேலும், மலேசியாவிற்குள் நுழைய தேவையான கட்டாய கோவிட்-19 காப்பீட்டை அகற்றுவது உள்ளிட்ட பிற கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.

Breaking: சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை செய்தது!